கந்தூரி விழா: நாகூர் தர்காவில் கொடியேற்றம்

செவ்வாய், 26 மே 2009 (15:02 IST)
நாகூர் தர்காவில் 452வது கந்தூரி விழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

க‌‌ந்தூ‌ரி ‌விழாவையொ‌ட்டி நாகை பேய்குளம் மீரா பள்ளிவாசலில் இருந்து நே‌ற்று கொடி ஊர்வலம் துவ‌ங்‌கியது.

செம்மரக்கடை வீதியில் முதுபக்கு எனப்படும் கந்தூரி கொடி தாங்கிய கப்பல் வடிவ ரதத்திற்கு தூஆ ஓதப்பட்டு ஊர்வலம் தொடங்கியது.
அதேபோல், பெரிய ரதம், சின்ன ரதம், 2 கப்பல் வடிவ ரதங்கள், செட்டிப்பல்லக்கு உட்பட 5 ரதங்களில், தர்காவில் உள்ள 5 மினார்களில் ஏற்றப்படும் புனிதக்கொடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

ரதங்களின் முன்னும் பின்னும் சாம்பிராணி பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வடிவிலான 50க்கும் மேற்பட்ட ரதங்கள் நாகை பேய்க்குளம் மீராப்பள்ளி வாசலில் இருந்து புறப்பட்டது.

நாகூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற ரதங்கள், நாகூர் தர்கா அலங்கார வாசலை சென்றடைந்தது. பின்னர் அங்கு தர்கா ‌நி‌ர்வா‌கி கலிபா சாப் தூஆ ஓத, தர்காவின் 5 மினார்களிலும் புனிதக்கொடி ஏற்றப்பட்டது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்