பஞ்சாப் அணிக்கு தலைமையேற்ற தமிழக வீரர் அஸ்வின்

திங்கள், 26 பிப்ரவரி 2018 (17:23 IST)
வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ள 11-வது ஐபில் தொடரில் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக தமிழக வீரர் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் அஸ்வினை சிஎஸ்கே அணி வாங்கிவிடும் என எதிர்ப்பார்த்த நிலையில். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
அஸ்வினை ஏலத்தில் எடுக்க சென்னை அணி தனக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா அதிக முயற்சி எடுத்து அஸ்வினை ஏலத்தில் எடுத்தார்.
 
இந்நிலையில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் விரேந்திர சேவாக், தனது முகநூல் நேரலையில் அஸ்வினை புதிய கேப்டனாக நியமித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்