8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அவ்வப்போது இப்போட்டிகளில் சில சர்ச்சைகளும் அரங்கேறிகொண்டுதான் இருக்கின்றன. இதில் மே 9 அன்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் பஞ்சாப் வீரரான டேவிட் மில்லர் களத்தில் ஒரு இமாலய சிக்சரை அடித்து விளாசினார்.
டேவிட் மில்லர் அடித்த இந்த பந்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலரின் கண்ணை பதம் பார்த்தது. உடனே காவலரை மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவர்களால் பாதுகாப்பு காவலரின் கண் பார்வையை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து முன்னாள் இந்திய கேப்டனான கங்குலி கூறுகையில், யாரும் எதிர்பார்க்காமல் நடந்த இந்த சோக சம்பவத்திற்கு மிகவும் வருந்துகிறேன் என்றார்.