செப். முதல் ஐபிஎல் 2020? பிசிசிஐ-க்கு பச்சை கொடி காட்டுமா மத்திய அரசு?

செவ்வாய், 21 ஜூலை 2020 (13:44 IST)
ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. 
 
கடந்த மார்ச் மாதம் தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக ஏப்ரல் 15க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் நிலவரம் தீவிரமடைந்து வருவதால் இதுவரை ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமலே உள்ளன. அதேசமயம் வேறு நாடுகளில் ஐபிஎல் நடத்துவது, பார்வையாளர்கள் இல்லாத போட்டியாக நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்து வந்தது. 
 
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் எனவும், இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என தெரிவித்துள்ளனர். 
 
டிசம்பரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் நவம்பர் மாத துவக்கத்திலேயே போட்டியை நடத்தி முடிக்க வேண்டும் என பிசிசிஐ எண்ணுவதாக தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்