தொப்பியை மறந்து தொப்பி வாங்கிய பிரண்டன் மெக்கலம் (வீடியோ)!!

புதன், 19 ஏப்ரல் 2017 (12:06 IST)
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரின், 20 வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின.


 
 
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், குஜராத் வீரர் பிரண்டன் மெக்கலம் பவுண்ரி அருகே பிடித்த கேட்ச் வீணானது.
 
பெங்களூரு அணிக்காக களமிறங்கிய துவக்க வீரர் கிறிஸ் கெயில், 38 ரன்கள் எடுத்த போது, சிக்சர் அடிக்க பந்தை தூக்கி அடித்தார். இதை பவுண்டரி அருகே மெக்கலம் பறந்து ஒரே கையில் பிடித்தார்.
 
ஆனால் இவரது டைவில், அவர் தலையில் போட்டிருந்த தொப்பி, பவுண்டரி கோட்டில் பட்டதை ரீபிளேவில் அம்பயர் உறுதி செய்து அவுட் நிராகறிக்கப்பட்டது. இதனால் இவரது சூப்பர் கேட்ச் வீணானது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்