சொல்லி விக்கெட் எடுத்த ஷேன் வார்ன்

வெள்ளி, 23 டிசம்பர் 2011 (12:45 IST)
ஆஸ்ட்ரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் இருபது ஓவர் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு விளையாடிய ஷேன் வார்ன் அடுத்த பந்தை பேட்ஸ்மென் ஸ்வீப் செய்வார் நான் பந்தை வேகமாக வீசப்போகிறேன் என்று சொல்லி வைத்து விக்கெட் எடுத்தார்.

அது போன்று வார்ன் வீழ்த்தியது ஏப்பை சோப்பையான வீரர் அல்ல. பிரிஸ்பன் ஹீட் அணிக்கு விளையாடிய நியூசீலாந்தின் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம்தான் அவர்.

இருபது ஓவர் கிரிக்கெட்டின் போது வீரர்களிடம் மைக்ரோபோன் கொடுக்கப்பட்டு அவர்களிடம் வர்ணனையாளர் பேசுவது வழக்கம், நாம் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் இதனைப் பார்த்துள்ளோம்.

அவ்வாறாக ஷேன் வார்ன் பந்து வீசும்போது மைக்ரோபோனில் அவரிடம் பேசினர். அப்போது அடுத்த பந்தை மெக்கல்லம் ஸ்வீப் செய்ய முயல்வார் நான் ஒன்றை வேகமாக வீசப்போகிறேன் என்று கூறினார். அதே போல் வீச மெக்கல்லமும் வலையில் வீழ்ந்து ஸ்வீப் செய்ய பந்து அவரைத் தாண்டி ஸ்டம்ப்களைப் பெயர்த்தது.

வார்னினஇந்தபபந்தபற்றி கருத்துககூறிவேகப்பந்தவீச்சாளரரியானஹாரிஸ் "பொதுவாவார்னபோன்மேதைகளஇதனைசசெய்வதுண்டு. இந்தபபந்தஇப்படி வீசப்போகிறேன், அவரஆட்டமிழப்பாரஎன்றகூறுவதுண்டு, ஒருமுறகிளெனமெக்ரஇதபோன்றகூறி விக்கெடஎடுத்ததாஅறிகிறேன்" என்றார்

வெப்துனியாவைப் படிக்கவும்