'ஆடத் தெரியாட்டி ராக்கெட் என்ன செய்யும்?" டென்னிஸ் வீரர் பக்தாடிஸ் ஆவேசம் (வீடியோ)
வியாழன், 19 ஜனவரி 2012 (18:32 IST)
ஆஸ்ட்ரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடரில் இரண்டு செட்கள் தோல்வியடைந்த சைப்ரஸ் வீரர் பக்தாடிஸ் வெறுப்பில் தனது 4 டென்னிஸ் மட்டைகளை பாதி ஆட்டத்திலேயே ஒடித்தது பெரும் பரபரப்புக்குள்ளாகியது.
ஆனாலும் வேறொரு மட்டையைக் கொண்டு 3வது செட்டை 7- 5 என்று வெற்றி பெற்றார், ஆனால் அடுத்த செட்டில் வாவ்ரின்கா இவரை வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றினார்.