கார்கில் வெற்றிக்கு பிறகு அந்நாள் பிரதமர் வாஜ்பாய் சொன்னது என்ன?

வெள்ளி, 24 ஜூலை 2020 (17:26 IST)
இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போர்களில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது கார்கில் போர். 
 
பாகிஸ்தான் சதியை முறியடிக்க 'ஆப்பரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது. 
 
தோல்வி உறுதி என்று தெரிந்த பின்னர் பாகிஸ்தான் அமெரிக்காவின் ஆதரவை நாடியது. அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கிற்கு கடும் கண்டம் தெரிவித்ததால், வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது.
 
1999 ஆம் ஆண்டு ஜூலை 26ல் இந்தியா, கார்கில் பகுதியை முழுவதுமாகக் கைப்பற்றி இந்திய கொடியை பறக்க விட்டது. நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டிய போர் இந்திய ராணுவ வீரர்களின் தீரமான செயல்களால் இரண்டே மாதத்தில் முடிவடைந்தது. 
 
அந்த வெற்றிக்கு பிறகு அப்போதைய பிரதமர் வாஜ்பாய், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கூட வெற்றிபெற முடியாத அவர்கள் (பாகிஸ்தான்), எந்த நம்பிக்கையில் இந்தியாவுடன் போரிட வந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருகிறது என்று பாகிஸ்தானை விமர்சித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்