குழந்தைகளுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வருகிறதா? உடனே செய்ய வேண்டியது என்ன?
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (20:42 IST)
எந்தவித காயமும் இன்றி சில குழந்தைகளுக்கு திடீரென மூக்கில் இருந்து ரத்தம் வரும் என்ற நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் வருவது ஏன்? அதை நிறுத்துவது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
மூக்கு என்பது நாம் மூச்சு விடுவதற்கு மட்டுமின்றி வெளியில் இருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ சூடான காற்றையோ நம் உடலுக்கு தேவையான அளவுக்கு வெப்பநிலைக்கு மாற்றி உள்ளே அனுப்பும் வேலையை தான் மூக்கு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூக்கில் இருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் சில்லு மூக்கு என்ற பகுதியில் ஏற்படும் கோளாறு தான். மீதி 20% உடனில் உள்ள பிற கோளாறுகளினால் ஏற்படுவது.
குழந்தைகள் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள், சில சமயம் ஏதாவது ஒரு பொருளை வைத்து குடைவார்கள், அப்போது சில்லு மூக்கு திடீரென உடைந்து ரத்தக் கசிவு ஏற்படும்
சிலருக்கு அலர்ஜி காரணமாக காரணமாகவும் மூக்கிலிருந்து ரத்தம் வர வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மூக்கிலிருந்து ரத்தம் வருவது நிற்காவிட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது