ஆறாத புண்களை விரைவில் குணமாக்கும் நித்திய கல்யாணி !!

வியாழன், 20 மே 2021 (23:14 IST)
நித்திய கல்யாணி இலை, பூ ஆகியவற்றில் இருந்து புற்றுநோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது.
 
 
மார்பக புற்றுநோய்க்கு மருந்தாகிறது. நெறிக்கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நித்திய கல்யாணி பூக்களை பயன்படுத்தி புற்றுநோயாளிக்கான மருந்து தயாரிக்கலாம்.
 
 
தேவையான பொருட்கள்: நித்திய கல்யாணி பூக்கள், கருஞ்சீரகம். நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும்.  ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும்.
 
புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.
 
நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தேங்காய் எண்ணெய், நித்திய கல்யாணி இலை.
 
ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து  வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும். சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
 
நித்திய கல்யாணியின் வேரை இருபது கிராம் அளவிற்கு எடுத்து சுத்தப்படுத்தி அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க விட வேண்டும். அந்த குடிநீர் 200 மில்லி  லிட்டராக சுண்டும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும்.
 
இதை காலை மாலை இருவேளை 40 மில்லி முதல் 100 மில்லி வரை நோயின்  தன்மைக்கேற்ப வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் உங்களது மாதவிடாய் சுழற்சி நேர்த்தியாகிவிடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்