‘ஸ்பைடர்மேன்’ திரைப்படம் ஒரே வாரத்தில் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல்!

செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:51 IST)
ஸ்பைடர் மேன் திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு உலகம் முழுவதும் வசூல் செய்து விட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது
 
கடந்த வாரம் ஸ்பைடர்மேன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்து வருகிறது என்பதும் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்தியா அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் இந்த படம் ஒரே வாரத்தில் 4,500 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் புரமோஷன் செலவுகள் சேர்த்து 1500 கோடி என்ற நிலையில் தற்போது ஒரே வாரத்தில் மூன்று மடங்கு வசூல் செய்துவிட்டது படக்குழுவினர்களை பெரும் மகிழ்ச்சியை உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதுமட்டுமின்றி இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் என்பதால் 5000 முதல் 6000 கோடி வரை மொத்த வசூல் செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்