அந்த வால்டமோர்ட்டை தூசி தட்டுங்க..! டிவி தொடராக உருவாகும் ஹாரி பாட்டர்!

வியாழன், 28 ஜனவரி 2021 (13:39 IST)
உலக புகழ்பெற்ற ஹாரிபாட்டர் கதையை கொண்டு புதிய டிவி தொடர் தயாரிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜே.கே.ரோவ்லிங் எழுதிய புகழ்பெற்ற மாயாஜால கதை ஹாரி பாட்டர். இந்த கதை படமாக எடுக்கப்பட்டு வசூல் வெற்றிகளை குவித்த நிலையில் ஏழ்மையில் இருந்த ரோவ்லிங்கையும் பணக்காரராக ஆக்கியது. உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஹாரிப்பாட்டர் படங்களை தொடர்ந்து அதன் பின் கதையான பென்டாஸ்டிக் பீஸ்ட் திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் ஹாரிபாட்டரை மீண்டும் தொலைக்காட்சி தொடராக எடுக்க வார்னர் ப்ரோஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறுவயது முதலாக ஹாரிபாட்டர் என்றால் டேனியல் ராட்க்ளிப்பும், ஹெர்மாயினி என்றால் எமா வாட்சனுமே நினைவுக்கு வரும் நிலையில், அவர்களின் நடிப்பை ஒத்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த டிவி தொடரில் ஹாரி பாட்டரின் முக்கிய எதிரியான வால்டமார்ட் குறித்த பின்கதையும் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்