திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா?-பிரபல நடிகர்

திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (17:19 IST)
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

திமுகவினர், பாஜகவினர் உள்ளிட்ட பலரும் கலைஞரைப் பற்றிய முக்கிய தகவல்கள், அவருடனான தங்கள் நட்பை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த நடிகரும் பாஜக ஆதரவாளருமான  எஸ்.வி.சேகர் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டிவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், மாறுபட்ட கொள்கை உடையவனாக நான் இருந்தாலும் கடைசிவரை தனிப்பட்ட முறையில் என் மேல் அன்பு செலுத்திய “கலைஞர்” நான் மறக்க முடியாதவர். பஞ்சாயத்து, மாநில, மத்திய அரசு என ஆளுமை செய்தவர். அவர் நினைவுகளுடன். . இந்த வீடியோ போட்டவுடன் திமுகவிற்கு போறீங்களா, அங்க துண்டு போட்டாச்சா? போன்ற அல்ப கேள்விகளுக்கு என்னை நன்கு தெரிந்தவர்களிடம் என்னைப்பற்றி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். என் அரசியல் காட்ஃபாதர் மோடி ஜி. என் ராஜகுரு சோ…இதுவே என் அரசியல் நிலைப்பாடு’’ என்று தெரிவித்து , ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மாறுபட்ட கொள்கை உடையவனாக நான் இருந்தாலும் கடைசிவரை தனிப்பட்ட முறையில் என் மேல் அன்பு செலுத்திய “கலைஞர்” நான் மறக்க முடியாதவர். பஞ்சாயத்து, மாநில, மத்திய அரசு என ஆளுமை செய்தவர். அவர் நினைவுகளுடன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்