ஹாலிவுட்டிலிருந்து ஏகப்பட்ட திரைப்படங்கள் இந்தியாவில் வெளியானாலும் ஹீரோக்களுக்காக படம் பார்ப்பதுதான் அதிகம். ராபர்ட் டோனி, ஜாக்கி சான், சில்வஸ்டர் ஸ்டாலோம், டெவெய்ன் ஜான்சன் என ஹாலிவுட் பிரியர்களின் ஹீரோக்கள் பட்டியல் மிக நீளம். அதே போல சில இயக்குனர்கள் இயக்குவதாலேயே சில திரைப்படங்கள் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கப்படும். அப்படி ரசிகர்களை காத்திருக்க வைத்திருந்த படம்தான் ‘டெனட்’.
ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் கதைகளே புரிந்து கொள்ள சற்று சிரமப்பட கூடிய வகையிலானவை. பிரபல டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான பேட்மேனை மையப்படுத்தி இவர் எடுத்த ட்ரையாலஜி படங்கள் இந்திய ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. அதை தாண்டி இண்டெஸ்டெல்லார், இன்செப்ஷ, டன்கிர்க் ஆகிய படங்கள் உலக சினிமா ஆர்வலர்களால் பெரிதும் விரும்பப்பட்டவை.
இவரது குழப்பமான கதை சொல்லலில் உருவாகியுள்ள மற்றொரு புதிய படம்தான் டெனட். இறந்த காலத்தை எதிர்காலமாக கொண்ட ஹீரோ. வாழ்க்கை எல்லாருக்கும் முன்னோக்கி செல்லும் போது இவருக்கு மட்டும் பின்னோக்கி செல்லும். நடந்து முடிந்த சம்பவங்களே இவருக்கு எதிர்காலம். அப்படி இறந்த காலத்தில் அவர் எதை துப்பறிந்து கண்டுபிடிக்க போகிறார் என்பதே கதை என ட்ரெய்லரை பல முறை பார்த்து புரிந்து கொண்டதாக நினைத்தவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஜான் டேவிட் வாஷிங்டன், ராபர்ட் பேட்டின்சன் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் சில காட்சிகளை கிறிஸ்டோபர் நோலன் இந்தியாவில் படம் பிரித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னும் பின்னும் சென்று குழப்பும் டெனட் திரைப்படத்தின் ட்ரெய்லர் கீழே..!