2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘அவதார்’. உலகளவில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சாதனைகளை படைத்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக உலகளவில் அதிகம் வசூல் செய்த படமாக இருந்து வந்த அவதாரை சென்ற வருடம் வெளியான அவெஞ்சர்ஸ் முறியடுத்தது.
மொத்தம் 5 பாகம் கொண்ட அவதார் படத்தின் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் பலர் காத்திருக்க அதுகுறித்த புதிய அப்டேட் ஒன்றை அவதார் படக்குழு வெளியிட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் புதிய உலகை தேடி செல்லும் பண்டோராவாசிகள் மற்றும் புதிய இடங்களின் காட்சிகளை ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். இரண்டாம் பாகம் இதை மையப்படுத்திதான் இருக்கும் என பேசப்படுகிறது.