சிவபெருமான் பார்வதி தேவியுடன் இணைந்த படத்திற்கு வில்வ அர்ச்சனை செய்து லிங்காஷ்டகம் படிக்கலாம். அல்லது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு உரிய மந்திரங்களை ஜபிக்கலாம். முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரத்தை உணவாக எடுத்துக் கொள்ளலாம். பழச்சாறுகள், பால், பழம் போன்றவற்றை உட்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். வில்வ இலைகள் கிடைக்காதவர்கள் தோஷம் போக்கும் செவ்வரளி மலர்கள், சங்கு பூக்கள் அல்லது வீட்டில் பூக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்ய உகந்த மலர்கள் எதுவாயினும் அர்ச்சனை செய்ய பயன்படுத்தலாம்.
நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். அன்றைய நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வரலாம். மாலை வரை சிவ ஸ்லோகம் மனதிற்குள் உச்சரித்து வரவேண்டும். பின்னர் மாலையில் விளக்கேற்றி தூப, தீப ஆரத்தி காண்பித்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் உங்களுடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். இவ்வாறு விரதத்தை மேற்கொண்டு வந்தால், ஒருவர் தன் வாழ்வில் செய்த பாவங்கள் அகலும், நோய் நொடிகள் அண்டாது. அன்றைய தினம் முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.