ஆஞ்சநேயரை வழிபட உகந்த கிழமை எது தெரியுமா...?

சனி, 3 செப்டம்பர் 2022 (13:49 IST)
ஆஞ்சநேயரை எல்லாக் கிழமைகளிலும் வணங்கலாம். ஆனால் செவ்வாய் கிழமையும், சனி கிழமையும் ஆஞ்சநேயரை வணங்குவது கூடுதல் சிறப்பு. அந்த நாட்களில் அவருக்கு பிடித்த பொருட்களை கொண்டு வழிபட்டால் அவரின் அனுக்கிரஹம் எளிதில் கிடைக்கும்.


துளசி: ஆஞ்சநேயருக்கு மிகவும் பிடித்தது துளசி செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு துளசியை வைத்து வழிபாடு நடத்துங்கள். இது உங்கள் மனதின் சஞ்சலங்களை போக்கி அமைதியை தரும். வழிபட்ட பின் அந்த துளசியை நீங்கள் உண்ணவும் செய்யலாம்.

மல்லிகை எண்ணெய்: ஆஞ்சநேயர் அடிப்படையிலேயே ஒரு வாசனை பிரியர். எனவே மல்லிகை எண்ணெயை வைத்து வழிப்படுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மல்லிகை எண்ணெயில் குங்குமத்தையும் கலந்து அவருக்கு அபிஷேகம் செய்வது உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தை வழங்கும்.

தேங்காய்: தேங்காய் தண்ணீர் என்பது கலப்படம் இல்லாத இயற்கையின் அற்புத படைப்பாகும். தேங்காய் தண்ணீரால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்துவிட்டு தேங்காயுடன் குங்குமம் சேர்த்து அவர் பாதத்தில் வைத்து வணங்குவது அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும்.

ஆஞ்சநேயருக்கு பிடித்த நிறம் சிவப்பாகும்.எனவே சிவப்பு சந்தனம், சிவப்பு மலர்கள் போன்றவற்றை வைத்து வழிபடுவது நலம். முக்கோண வடிவ சிவப்பு துணியில் இராமருடைய பெயரை எழுதி ஆஞ்சநேயரை வழிபடுவது உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்க செய்யும்.

ஆஞ்சநேயருக்கு லட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதேபோல சுண்டல் மாலையும் பிடிக்கும். சுண்டலில் மாலைக்கட்டி லட்டு வைத்து ஆஞ்சநேயரை வணங்குவது நீங்கள் வேண்டும் அனைத்தையும் கிடைக்க செய்யும்.

ஆஞ்சநேயரை பொறுத்தவரை அவர் பெரிதாக நினைக்கும் இராமரை வழிப்படுவதே அவரின் அருளை பெறுவதற்கான எளிய வழி. "ஓம் இராமதூதாய நமஹ" இந்த மந்திரத்தை 108 முறை மனதை ஒருநிலைப்படுத்தி கூறினால் அவரின் பலமும், அருளும், ஆற்றலும் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்