வீட்டில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்வதால் என்ன பலன்கள்...?

வெள்ளி, 8 ஜூலை 2022 (13:08 IST)
வலம்புரிச் சங்குகளை இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதுகின்றனர். இந்த வலம்புரி சங்கு மிகவும் பெரும் மதிப்பாக கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.


வலம்புரி சங்கு என்பது சங்குவகைகளில் காணப்படக்கூடிய ஒரு அரியவகை சங்கு ஆகும். இவை வலது பக்கம் சுழிந்து காணப்படும்.சங்குகளில் பெரும்பாலும் பல வகைகளில் காணப்பட்டாலும் வலம்புரிச்சங்கு சிறப்பு தன்மையுடையதாக காணப்படுகிறது.

கடலில் பிறக்கும் ஒரு சங்கில் சுருண்டிருக்கும் வரிகள் வாய்ப் பகுதியில் ஆரம்பித்து வலதுபுறமாக சுழன்று முடிந்தால், அது வலம்புரிச் சங்கு. காதில் வைத்துக் கேட்டால் அது ‘ஓம்’ என்ற சப்தத்தை எழுப்பும்.

சங்குகளில் இரண்டு வகைகள் உண்டு. இடப்பக்கம் சுழிந்து செல்லும் சங்குகள் உலகில் எளிதாகக் கிடைக்கும். வலது பக்கம் சுழியுடைய வலம்புரிச் சங்குகள் அபூர்வமாகவே கிடைக்கும்.

வலம்புரி சங்கு இருக்கும் இடத்தில் சர்வ லட்சணமும் நிறைந்து காணப்படும் என்பது ஐதீகம். வலம்புரி சங்கில் கொஞ்சம் துளசி தீர்த்தத்தை விட்டு பின்பு அதை அருந்துவது அமிர்தத்துக்கு இணையாக சொல்லப்படுகிறது.

கடன் பிரச்சினை உடையோர் வலம்புரி சங்கினை வாசல் மேற்படியிலோ இல்லை வீட்டின் நடுபகுதியில் வைத்து காலையில் குளித்து விட்டு பூஜை செய்வது நல்ல பயனை அளிக்கும் .
பௌர்ணமி அன்று சங்கிற்கு பூக்களால் அலங்காரம் செய்து பூஜைகள் செய்து பின்பு பாலினை சங்கினில் ஊற்றி அதனை பருகுவது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தையும் நல்ல பாக்கியத்தையும் கொடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்