குருவின் அருளை பெற்றுத்தரும் வியாசபூர்ணிமா !!

புதன், 13 ஜூலை 2022 (13:38 IST)
குரு பூர்ணிமா இந்து மதத்தில் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு குரு பூர்ணிமா விழாவானது இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.


பவுர்ணமி நாளில் நம்முடைய வாழ்க்கையில் வழிகாட்டிய குருவை வணங்கி அவர்களின் ஆசி பெற்றால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். குரு அருளுடன் திருவருளும் கிடைக்கும்.

குரு பூர்ணிமா என்பது முனிவர் வேத வியாசருக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். இந்த நன்னாளில் தான் வேத வியாசர் பிறந்ததாக நம்பப்படுகிறது, மேலும், இந்த திருநாள் வியாச பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. பூர்ண நிலையில் தன்னுள் இருக்கும் குரு தன்மையை உணர ஒவ்வோரு உயிர்களுக்கும் சாதகமாக அமைந்த நாள் தான் குரு பூர்ணிமா.

வியாசபூர்ணிமா கொண்டாடப்படும் இன்றைய தினம் அருள்மிகு ரவீஸ்வரரையும் வேதவியாசரையும் வணங்க நலம் பல கிடைக்கும். குரு பௌர்ணமி நன்னாளில், ஆசாரியப் பெருமக்களுக்கு, இயன்ற பொருட்களை சமர்ப்பித்து ஆசி பெறுதல் சிறந்தது.

குருபக்தி எனும் மிகவுயர்ந்த பொருட்களை குருவுக்குச் சமர்ப்பித்தலே உண்மையான சமர்ப்பணமாகும். வியாச பூஜையின் தத்துவம் இதுவே. நமது குல ஆசாரியர்களை, நமக்குக் கல்வி கற்பித்த குருமார்களை, நேரில் செல்ல முடியாவிட்டாலும், மனதால் வணங்கி வழிபடுவது நம் வாழ்வில் நலம் பல சேர்க்கும்.

ஆடி முதல் வெள்ளி உடன் இன்றைய தினம் பவுர்ணமியும் சேர்ந்து வருவது மேலும் மேலும் சிறப்பு. முதல் வாரமே ஆடி மாத வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினத்தன்று வருவதால் வீட்டில் விளக்கேற்றி அம்மனை வழிபடுவதுடன் நமக்கு வழிகாட்டியாக இருந்த குருவையும் வணங்கினால் குரு அருளுடன் திருவருளும் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்