ஆகமங்களில், சனியினுடைய உருவம், உடை ஆகியவைப் பற்றிய செய்திகள் வருகின்றன. கரிய நிறமுடையவன். கரிய ஆடையை அணிபவன். ஒரு கால் முடவன். இருகரம் உடையவன்.
நவக்ரக ஆராதனம் என்னும் நூலில் சனி பகவான் வில்லைப்போல ஆசனத்தில் வீற்றிருப்பான். அழகு வாகனம் உடையவன். மேற்கு நோக்கி இருப்பான். நீல மேனி உடையவன். முடிதரித்தவன். சூலம், வில், வரதம், அபயம் கொண்டவன், மெல்ல நடப்பவன். கருஞ்சந்தனம் பூசுபவன். கருமலர், நீலமலர் மாலையை விரும்புகிறவன்.
கரு நிறக்குடை, கொடி கொண்டவன் என்று சனியை பற்றி குறிப்பிட்டிருக்கிறது. சனிக்கு, அதிதேவதை யமன். வலப்பக்கத்தில் இவனை ஆவாகனம் செய்யவேண்டும். இடப்பக்கத்தில் ப்ரத்யாதி தேவதை யாகிய பிரஜாபதி இருப்பார்.