பைரவரை வழிபட்டால் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையுமா...?

வியாழன், 7 ஜூலை 2022 (17:54 IST)
சனிக்கு வரம் தந்து, இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.


தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும், கால வர்த்தமான நிர்ணயப்படி நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார். அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.

சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவர்களுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்வார்.

வாக்குச்சனியால் அவதிப்படும் விருச்சிக ராசியினர் அதிலிருந்து விடுபடுவர். ஜன்மச்சனியால் வாழ்வின் விரக்தியில் இருக்கும் தனுசு ராசியினர் நிம்மதி அடைவார்கள். விரையச்சனியால் சேமிக்க முடியாமல் திண்டாடும் மகரம் ராசியினர் அதிலிருந்து மீள்வார்கள்.

அஷ்டமச்சனியால் துன்பப்படும் ரிஷப ராசியினர், அதிலிருந்து விலகி நிரந்தரமான தொழிலை அடைவார்கள். கண்டச்சனியால் தம்பதியரி டையே கருத்து வேறுபாட்டுடன் தவிக்கும் மிதுனம் ராசியினர் ஒற்றுமையைப் பெறுவார்கள். அர்த்தாஷ்டமச்சனியால் தடுமாறும் கன்னி ராசியினர் தெளிவடைவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்