வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா..! திரளான பக்தர்கள் பங்கேற்பு.!!

Senthil Velan

வியாழன், 15 பிப்ரவரி 2024 (18:22 IST)
திருமங்கலம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்குப் பாத்தியப் பட்ட ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மேல பரங்கிரி பூமி நீளா சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் உள்ளது. 
 
இந்த கோவிலில் குடமுழுக்கு விழா கிராமப் பொதுமக்கள் சார்பில்,  25 ஆண்டுகளுக்கு பிறகு,  தற்போது வெகு விமர்சையாக நடைபெற்றது. 
 
முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் ஐந்து கால பூஜைகள் நடைபெற்று, கலசங்களில் வைக்கப்பட்டுள்ள தீர்த்தங்களை  பூஜிக்கச் செய்த பின்பு, கோவில் மேல் உள்ள கோபுரத்திற்கு மகா சம்ப்ரோக்ஷணம் செய்தனர்.

ALSO READ: போலீஸ் அதிகாரி மனைவியிடமே சில்மிஷம் செய்த போதை ஆசாமி.. தர்ம அடி விழுந்ததால் பரபரப்பு..!
 
இவ்விழாவில் பேரையூர்,  கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் இருந்து,  ஏராளமான பக்தர்கள்  தரிசனம் மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து,  கிராம பொதுமக்கள் சார்பில் அங்கு கூடி இருந்த 2000 -க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்