மாசி மாத பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் நடை திறப்பு! – பக்தர்களுக்கு அனுமதி எப்போது?

Prasanth Karthick

செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (09:20 IST)
மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படும் நிலையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.



சபரிமலையில் கோவில் கொண்டுள்ள சுவாமி ஐயப்பனை தரிசிக்க மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இதுதவிர மாதம்தோறும் தமிழ் மாத பிறப்பின்போது சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.

ALSO READ: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் முன்பு தீ வைத்த மர்ம நபர் கைது.. தீவிர விசாரணை..!

இன்று மாசி மாதம் பிறந்துள்ள நிலையில் இன்று மாலை பூஜைகளுக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலையே நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 5 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

பிப்ரவரி 13 முதல் 18ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோவில் நடை திறந்திருக்கும் என்பதால் 5 நாட்களுக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பிப்ரவரி 14 – 18 தேதிகளில் தினசரி இரவு 7 மணிக்கு படிபூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்