விடிய விடிய கொண்டாடப்படும் மகா சிவராத்திரி..!

Mahendran

வெள்ளி, 8 மார்ச் 2024 (18:52 IST)
இன்று விடிய விடிய கொண்டாடப்படும் மகா சிவராத்திரி, இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இன்றைய மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடினார் என்று நம்பப்படுகிறது. 
 
மகா சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால், அறியாமல் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.  மகா சிவராத்திரி இரவில் சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் பெற வழி கிடைக்கும் 
 
பக்தர்கள், மகா சிவராத்திரி இரவு முழுவதும் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுவார்கள்.  சிவபெருமானுக்கு பால், தேன், பழங்கள், மலர்கள் போன்றவற்றை அபிஷேகம் செய்து, பூஜை செய்வார்கள். பக்தர்கள், "ஓம் நமசிவாய" மந்திரத்தை மனதுக்குள் கூறி சிவபெருமானின் அருளைப் பெறுவார்கள். 
 
சிவபெருமானை நினைத்து, இரவு முழுவதும் கண் விழித்திருப்பார்கள்.  பக்தர்கள், சிவன் கோயில்களுக்கு சென்று, சிவபெருமானை தரிசனம் செய்வார்கள். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்