திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு மாசி பச்சை என்று அழைக்கக்கூடிய திருவிழாவான மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோயிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலம் சாமி பொட்டி அழைப்போடு நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோயில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்து ஊர்வலம் தொடங்கி டயர் மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர்.