திரைலோக்கிய கவுரி விரதம் இருந்தால் திருமண வரும் கிடைக்கும்..!

Mahendran

வியாழன், 23 ஜனவரி 2025 (18:57 IST)
இன்று திரைலோக்கிய  விரதம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
 
இன்று வியாழக்கிழமை திரைலோக்கிய கௌரி விரதம் அனுசரிக்கப்படுவதை அடுத்து இந்த விரதத்தை பெண்கள் இருந்தால் அளவற்ற பயன்கள் பெறலாம் என்றும் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
 
16 விளக்குகள் ஏற்றி ஆராதனை செய்து இந்த விரதத்தை இருந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்றும் திருமண வயதில் உள்ள பெண்கள் இன்று இரவு இந்த விரதத்தை கடைபிடித்து மனமுருகி வழிபட்டால் நிச்சயம் திருமணம் விரைவில் நடக்கும் என்றும் அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
கௌரி பூஜை முடிந்ததும் அருகில் உள்ள பெண்களுக்கு மங்கலப் பொருட்களை கொடுத்து ஆசி பெறலாம் என்றும் இதனால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்