நாளை தூர்வாஷ்டமி தினம்.. அருகம்புல் வழிபாடு செய்தால் ஏற்படும் சிறப்புகள்..!

Mahendran

சனி, 30 ஆகஸ்ட் 2025 (18:15 IST)
நாளை  கொண்டாடப்பட இருக்கும் தூர்வாஷ்டமி, அருகம்புல்லை  லட்சுமி தேவியின் அம்சமாக கருதி வழிபடும் ஒரு புனித தினமாகும். ஆவணி மாதத்தில் வரும் சுக்லபட்ச அஷ்டமியில் அனுசரிக்கப்படும் இந்த விரதம், குறிப்பாக பெண்களால் கடைப்பிடிக்கப்படும் ஒரு உன்னதமான வழிபாடாக கருதப்படுகிறது.
 
நாளை சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்து, புதிய ஆடையணிந்து, சுத்தம் செய்த அருகம்புல்லை தட்டில் வைத்து இறைவனுக்கு மலர்களால் அர்ச்சித்து ஸ்லோகங்கள் சொல்லி வழிபட வேண்டும்.
 
மகாவிஷ்ணுவின் திருமுடிகளிலிருந்து அருகம்புல் தோன்றியதாகவும், அமிர்தம் கொண்டு செல்லும் போது சிந்திய சில துளிகள் இதன் மீது விழுந்ததாகவும் இந்து புராணங்கள் கூறுகின்றன.
 
உடல் சூட்டைத் தணிக்கும் குணம் கொண்ட அருகம்புல்லை இந்த தூர்வாஷ்டமி தினத்தன்று வழிபடுவது, நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரும் என நம்பப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்