செழிப்பு தரும் செப்டம்பர் மாத ராசிபலன்கள் 2025! – விருச்சிகம்

Prasanth K

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2025 (05:32 IST)
செழிப்பையும், செல்வத்தையும் தரும் மாதமான செப்டம்பர் மாதத்தில் உங்களுக்கான ராசிபலன் மற்றும் பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

கிரகநிலை:
ராசியில்  சந்திரன் - சுக ஸ்தானத்தில்  சனி (வ), ராஹு - அஷ்டம  ஸ்தானத்தில்  குரு - பாக்கிய ஸ்தானத்தில்  சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில்  சூர்யன், புதன், கேது - லாப  ஸ்தானத்தில்  செவ்வாய் என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
11.09.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  புதன் லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
14.09.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  செவ்வாய் அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
15.09.2025 அன்று  பாக்கிய ஸ்தானத்தில்  இருந்து  சுக்கிரன் தொழில்  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
16.09.2025 அன்று  தொழில்  ஸ்தானத்தில்  இருந்து  சூர்யன் லாப  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.
29.09.2025 அன்று  லாப  ஸ்தானத்தில்  இருந்து  புதன் அயன சயன போக  ஸ்தானத்திற்கு  மாறுகிறார்.

பலன்:
உங்களூக்கு இந்த மாதம் நன்மைகள் கிடைக்கும். காரியதடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண்கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.

திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். அரசியல் துறையினருக்கு சந்தோஷமான நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

விசாகம்:
இந்த மாதம் குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம்.

அனுஷம்:
இந்த மாதம் பணப்புழக்கம் சரியாக இருக்கும். ஆனால் சுபநிகழ்ச்சிகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். தூங்கும் போது கவனம் தேவை. பொருட்களை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட கூடாது. அப்படி போட்டால் பிரச்சனைகள் வரலாம்.

கேட்டை:
இந்த மாதம் நண்பர்களை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் கவனம் தேவை. பெரியோர்களின் ஆதரவால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொருளாதார சிக்கல்கள் தீரும். சிலர் கடன் வாங்கி உடனே திருப்பி கொடுத்து விடுவார்கள். மனதில் தேவையில்லாத வெளியில் சொல்ல முடியாத வேதனை மற்றும் பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

அதிர்ஷ்டகிழமைகள்: செவ்வாய், சனி
சந்திராஷ்டம தினங்கள்: 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்