நந்தி கல்யாணம்.. திருமண தடை விலக உடனே இதை செய்ய வேண்டும்..!

Mahendran

திங்கள், 20 ஜனவரி 2025 (19:07 IST)
திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் உடனடியாக திருமணம் ஆக வேண்டும் என்றால் நந்தி கல்யாணம் பார்க்க வேண்டும் என ஆன்மீக பெரியவர்கள் கூறி வருகின்றனர் சிவபெருமான் தன் மகனாகவே நம்பியை ஏற்றுக் கொண்ட நிலையில் நம்பிக்.
 
நந்தியை தனது போல் நினைத்த சிவபெருமான், நந்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, வசிஷ்ட முனிவரின் பேத்தியை திருமணம் செய்து வைத்தார்.
 
பங்குனி மாதம் பூச நட்சத்திர நாளில் தான் நந்தி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு சிவபெருமான், பார்வதி செங்கோல் ஏந்தி குதிரை வாகனத்தில் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
 
இந்த நந்தி திருமணம் பங்குனி மாதம் பூச நட்சத்திர தினத்தன்று நடைபெறும் நிலையில் இதை காணும் திருமணமாகாத ஆண்கள் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாக உள்ளது. நந்தி கல்யாணம் கண்டால் முந்தி கல்யாணம் என்பது பழமொழியாகவே நமது முன்னோர்கள் கூறி வருகின்றனர்.
 
 அது மட்டுமின்றி இந்த நந்தி கல்யாண விழாவை காண்பவர் இல்லத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும் என்றும் சுப காரியங்கள் உடனே நடக்கும் என்றும் வீட்டில் நல்லது நடைபெற வேண்டுமென்றால் நந்தி திருமணத்தை பார்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்