புனித சூசையப்பர் ஆலய ஆண்டுவிழா மற்றும் தேர்த்திருவிழா

புதன், 19 ஏப்ரல் 2023 (22:03 IST)
சென்னை எண்ணூர் கத்திவாக்கம் சாலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நாளை மாலை கொடியேற்றப்படுகிறது.

இந்த விழாவுக்கு உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோனி தலலைமை தாங்கவுள்ளார்.

நாளை மறுநாள் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை 6 மணிக்கு புது நன்மை தினம் கடைப்பிடிக்கப்படும் எனவும், 24 ஆம் தேதி குழந்தைகள் தினம் நடத்தப்படவுள்ளது.

வரும் 26 ஆம் தேதி தம்பதியர் தினம், 27 ஆம் தேதி முதியோர் தினம், 28 ஆம் தேதி நற்கருணை தினம் நடைபெறுகிறது.  பின்னர், 29 ஆம் தேதி ஆடம்பர தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.

அன்று மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைவதாக கோவிர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்