விநாயகரின் திருவுருவம் விலங்கு, பூதம், மனிதன், தேவர் என்கிற நான்கின் இணைப்பாக காட்சி தருகிறது. அதாவது இவருடைய யானைத் தலை, செவி, தும்பிக்கை - விலங்கு வடிவமாகும். பேழை வயிறு, குறுகிய கால்கள் - பூத வடிவமாகும். புருவம், கண்கள் - மனித வடிவமாகும். இரண்டிற்கும் மேற்பட்ட கைகள் - தேவ வடிவமாகும்.
சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். முழுநேரமும் விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழத்தை சாப்பிடலாம். சதுர்த்தி அன்று மாலை ஆலயத்திற்கு சென்று விநாயகப்பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ள வேண்டும்.
விநாயகப்பெருமானுக்கு சுண்டல், பாயசம், சர்க்கரைப் பொங்கல் அல்லது கொழுக்கட்டை என நெய்வேத்தியம் செய்து அக்கம்-பக்கம் உள்ளவர்களுக்கு வழங்குங்கள்.