காரைக்கால் அம்மையாரை போற்றும் விதமாக கொண்டாடப்படும் மாங்கனி திருவிழா !!

செவ்வாய், 12 ஜூலை 2022 (10:40 IST)
63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புக் கொண்டவர் காரைக்கால் அம்மையார்.


சிவபெருமானின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு திருக்கல்யாணமும், மாலை 6.30 மணிக்கு பிச்சாண்டவர் (சிவன்) வெள்ளை சாத்தி புறப்பாடும்  (புதன்கிழமை) பிச்சாண்டவ மூர்த்தி மற்றும் பஞ்சாமூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும், அதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு, பிச்சாண்டவர் திருவீதியுலாவும், அதுசமயம் நேர்த்திக்கடனாக பக்தர்கள் மாங்கனிகளை இறைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அன்று மாலை 6 மணிக்கு பிச்சாண்டவரை காரைக்கால் அம்மையார் எதிர்கொண்டு அழைத்து அமுது படையல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 14-ந் தேதி அதிகாலை அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்ச்சி நடக்கிறது.

காரைக்காலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காரைக்கால் அம்மையார் மாம்பழத் திருவிழா நாளை வெகு விமர்சியாக தொடங்கவுள்ளது. 63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற சிறப்புக் கொண்டவர் இந்த காரைக்கால் அம்மையார். சிவபெருமானின் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரிய காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றைப் போற்றும் விதமாக ஆண்டுதோறும் இந்த மாங்கனித் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்டுக் கொண்டிருந்த திருவிழா இந்த ஆண்டு மக்கள் முன்னிலையில் வழக்கம் போல நடத்தப்பட இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்