பின்பு கணபதி, லட்சுமி, நவகிரக, ஹோமங்கள், முதலியவை விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், வாஸ்து பூஜை நடைபெற்றது. பின்பு ஸ்ரீ அத்தனூர் அம்மனுக்கு பெண்கள் காட்டுப்புத்தூர் மகா மாரியம்மன் கோவிலிருந்து முளைப்பாரி எடுத்து வந்தனர்.
அதன் பின்பு ரஷபந்தனம், யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜை ஹோமங்கள் நடைபெற்றது. இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜை காட்டுப் புத்தூர் சிவஸ்ரீ செல்வ வாகீஸ்வர சிவாச்சாரியார் குழுவினரால் சிறப்பாக நடைபெற்று கடம்புறப்பட்டு ஸ்ரீ அத்தனூர் அம்மன் மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷே விழா சிறப்பாக நடைபெற்றது.