இன்று கிருஷ்ண ஜெயந்தி.. கிருஷ்ணரை ஐதீகப்படி வழிபடுவது எப்படி?

Mahendran

சனி, 16 ஆகஸ்ட் 2025 (22:34 IST)
கிருஷ்ணர் துவாபர யுகத்தில் ஆவணி மாதம், தேய்பிறை அஷ்டமி திதியில், தேவகிக்கும் வசுதேவருக்கும் எட்டாவது குழந்தையாக அவதரித்தார். இதன் காரணமாக, ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் தேதி அதிகாலை 1.41 மணி முதல் இரவு 11.13 மணி வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா அமைந்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்திக்கு முன்னதாகவே வீட்டை சுத்தம் செய்து, அலங்காரங்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். கிருஷ்ணருக்கு பிடித்த இனிப்பு பலகாரங்கள் மற்றும் தின்பண்டங்களை செய்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். 

கிருஷ்ணரின் சிலை அல்லது படத்தை வாசனை மிகுந்த மலர்களால் அலங்கரித்து, பச்சரிசி மாவினால் கிருஷ்ணரின் பாதங்களை வீட்டு வாசல் முதல் பூஜை அறை வரை வரைய வேண்டும். இது, குழந்தை கிருஷ்ணரை வீட்டிற்குள் அழைப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. பூஜையின் போது கிருஷ்ணரின் மந்திரங்கள் மற்றும் சுலோகங்களை சொல்லி வழிபடுவதால், வீட்டில் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்