அந்த வகையில், இந்தாண்டு மாசி மகத்திருவிழா மற்றும் தெப்பத்திருவிழா கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையும் மாலையும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பெருமாள்.
ஸ்ரீகல்யாண வெங்கட்ரமண சுவாமி, சீதேவி, பூதேவி சமேதராக பெரிய தேரிலும், அனுமன் சின்ன தேரிலும் எழுந்தருளினார்கள். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.