இக்கோவிலின் மூலவரான மாரியம்மன் சிலை எட்டு கரங்களுடன், தலையில் சர்ப்பக் கொடியுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து வீற்றிருக்கும் படி இருக்கிறார். இதில் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மாயாசூரன் என்பவன் நோய்களின் அதிபதி ஆவார். அம்மன் அவனை வதம் செய்து, நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றினார்.
தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், ஆடிப்பூரத் திருநாள், நவராத்திரி பெருவிழா உள்ளிட்ட பிற திருவிழாக்களும் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகின்றன.