கஷ்டங்களை தீர்க்கும் துர்கை அம்மன் வழிபாடு..!

வெள்ளி, 7 ஜூலை 2023 (18:18 IST)
சிவ ஆலயம் சென்று துர்கை அம்மனை வழிபட்டால் கஷ்டங்கள் தீரும் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
 பூரம் நட்சத்திரம் அம்மன் அவதாரம் செய்த நட்சத்திரம் என்றும் அந்த தேதியில் அம்மன் ஆலயங்கள் சென்று வழிபாடு செய்தால் கஷ்டங்கள் தீரும் என்றும் குறிப்பாக சிவ ஆலயங்களில் உள்ள துர்கை தேவியை வழிபட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவல்லிபுத்தூர் கோவிலில் நரசிம்மர் ஆலயம் சென்று வழிபட்டால் கடன் மற்றும் நோய்கள் தீரும் என்று கூறப்படுகிறது. குடும்பப் பிரச்சினை உள்பட எந்த பிரச்சனையாக இருந்தாலும் துர்கா தேவியை வழிபட்டால் உடனடியாக தீர்ந்து விடும் என்றும் ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர் 
 
அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பூரம் நட்சத்திர தினத்தில் துர்க்கைக்கு அபிஷேகம் ஆராதனை செய்து வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்