அந்த வகையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறலாம் என்று வனத்துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்கள், எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் அது போன்ற பொருட்களுடன் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.