குலம் காக்கும் குலதெய்வம் வழிபாடு!

வெள்ளி, 2 டிசம்பர் 2022 (20:03 IST)
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இருக்கும் குலதெய்வத்தை தவறாமல் வழிபாடு செய்து வந்தாள் எந்தவிதமான சிக்கலும் இருக்காது என முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
 குலதெய்வம் இஷ்ட தெய்வம் வழிபடும் தெய்வம் மந்திரத்திற்குரிய தெய்வம் என பல்வேறு பெயர்களில் உள்ள குலதெய்வம் மற்ற அனைத்து தெய்வங்களையும் விட மிகவும் முக்கியமானதாகும்
 
பாரம்பரியமாக காலங்காலமாக வழிபட்டு வரும் குலதெய்வத்தை வழிபடுவதன் காரணமாக அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர் 
 
கோள்கள் செய்யாததை குலதெய்வம் செய்யும் என்று ஒரு பழமொழியே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. எனவே குலதெய்வத்தை தவறாமல் ஒவ்வொருவரும் பூஜை செய்து வந்தால் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் வெளியே வந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
பரம்பரையாக நமது முன்னோர்கள் வழிவழியாக வழிபட்டு வரும் குலதெய்வம் என்பது தமிழர் பண்பாடாக உள்ளது. குலதெய்வம் நம்முடைய குடும்பத்தின் அக்கறையில் நலன்களை காக்கும் தெய்வமாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடதக்கது
 
எனவே எந்த தோஷம் இருந்தாலும் குலதெய்வத்திடம் சென்று முறையிட்டால் அந்த தோஷம் பஞ்சாய் பறந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்