சபரிமலை ஐயப்பன் கோவிலில் படிபூஜை: 2037ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்தது!

வியாழன், 17 நவம்பர் 2022 (07:41 IST)
சபரிமலை கோவிலில் படி பூஜை செய்வதற்கு 2037ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது 
 
சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை செய்வது என்பது முக்கியமான வழிபாட்டு முறையாகும். படி பூஜை செய்வதற்கு முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியம். 
 
இந்த நிலையில் திருவாங்கூர் தேவஸ்தானம் சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சபரிமலை கோவிலில் படி பூஜை செய்வதற்கு 2037ஆம் ஆண்டு வரை முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்
 
சபரிமலை படி பூஜை செய்வதற்கு கட்டணம் 75,000 ரூபாய் என்பதும் இதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜை பத்தாயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
15 ஆண்டுகளுக்கு முன்பே சபரிமலை படி பூஜை செய்ய முன்பதிவு முடிந்து உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்