கோவிலை உடைத்து அன்னதானத்தை தூக்கிய யானைகள்! – கோவையில் பரபரப்பு!

ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (10:12 IST)
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கோவிலை உடைத்த யானைகள் அன்னதானத்தை சூறையாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. சில சமயங்களில் சாலைகளில் யானைகள் தோன்றுவதால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதியில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் கோவில் பக்கம் வந்த 4 காட்டு யானைகள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளன. அங்கு வைக்கப்பட்டிருந்த அன்னதானம், பிரசாதம் தயாரிக்க வைத்திருந்த பருப்பு, வெல்லம் உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தையும் சாப்பிட்ட யானைகள், மூலவர் சன்னதி முன்பு இருந்த வாழைப்பழங்களையும் விட்டுவைக்கவில்லை.

மறுநாள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றபோது கோவில் கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்