இந்த கோவில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் ஆகியோரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சதுரகிரி சித்தர் சிவயோக ஞான சித்தர் அம்மன் சிலையை வடிவமைத்ததாக சொல்லப்படுகிறது.
அம்மனின் முகம் அருள் நிறைந்ததாக இருக்கும்.
தமிழகத்தின் மிகவும் பிரபலமான மாரியம்மன் கோவில்களில் ஒன்று. அம்மை நோய் தீர்க்கும் அம்மனாக புகழ்பெற்றவர். தினமும் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாள் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்