நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும். சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும். எருக்க மலர் மாலைகளைப் பெருமான் தலையில் வட்டமாக அணிவிக்க வேண்டும். ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரத்தை செய்ய வேண்டும், பெண்கள் ஐந்தங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும். என்று லிங்க புராணம் கூறுகிறது.