ஆஞ்சநேயருக்கு துளசி மாலை போடுவதினால் உண்டாகும் பலன்கள் !!

சனி, 12 மார்ச் 2022 (11:33 IST)
துளசியின் வாசம் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் துர்தேவதைகள் நுழைய முடியாது என்கிறது சாஸ்திரம். 

 
துளசிதேவியை தொடர்ந்து வழிபடுபவர்களின் இல்லத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். சகல ஐஸ்வர்யங்களும் குடிகொள்ளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
 
துளசிச் செடியில், முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்கிறார்கள் என துளசியைச் சிலாகிக்கிறது புராணம். மேலும் பனிரெண்டு சூரியர்களும் அஷ்ட வசுக்களும் அஸ்வினி தேவர் முதலானோரும் வாசம் செய்கின்றனர்.
 
இத்தனை பெருமையும் சாந்நித்தியமும் நிறைந்திருக்கும் துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பதும் பூஜிப்பதும் விசேஷம். பெருமாளுக்கு அதனால்தான் துளசி மாலை சார்த்தப்படுகிறது. 
 
இராமாவதாரத்தின் முடிவினில் “சீதாதேவி பூமியினில் சென்றுவிட்டால் மறுபடியும் என்னை எவ்வாறு அடைவாய்” என்று ஸ்ரீராமன் சீதையிடம் கேட்டான். அதற்கு சீதாதேவி, “நான் மறுபடியும் (திருத்துழாய்) துளசியாக வந்து உன் திருவடியை அடைவேன்” என்று கூறியதாக புராணங்கள் கூறுகிறது. 
 
துளிசி இருக்குமிடத்தில் ஸ்ரீ ராமர் இருக்கின்றார். ஸ்ரீராமன் இருக்குமிடத்தில் ஹனுமான் இருக்கின்றார் என்ற ஐதீகத்தினைக் கொண்டு, துளசியை மாலையாக ஸ்ரீ ராமனின் பிரசாதமாக ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், ஹனுமான் மிக்க மகிழ்வுற்று வேண்டுவோருக்கு வேண்டியவற்றைத் தந்து அருள்வார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்