சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர திருநாளில் நிகழ்ந்தவை என்ன தெரியுமா...?

புதன், 9 மார்ச் 2022 (17:28 IST)
திருப்பரங்குன்றத்தில் முருகன்-தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான். மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.


பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

ராமபிரான்-சீதாதேவி, பரதன் -மாண்டவி, லட்சுமணன்-ஊர்மிளை, சத்ருக்னன்-ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான். ஆண்டாள்-ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது. அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான். காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்