ஒவ்வொரு ஆண்டும் வளர்பிறை, தேய்பிறை காலங்களை கணக்கிட்டு மொத்தம் 25 ஏகாதசிகள் நிகழ்கின்றன. இதில் ஒவ்வொரு மாத ஏகாதசியும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பதால் நவகிரகங்களின் கொடும் ரேகைகள் நம்மிலிருந்து விலகி பூரணை அருளை தரும்.
மாசி மாதத்தின் வளர்பிறை மற்றும் தேய்பிறை இரண்டிலுமே வரும் ஏகாதசி நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று ஆமலகி ஏகாதசி நாள். வளர்பிறையில் வரும் ஆமலகி ஏகாதசி வாழ்வில் செல்வ செழிப்பையும், வெற்றிகளையும் அருளக் கூடியது. இந்நாளில் விஷ்ணு பெருமாளை மனதில் நினைத்து விரதமிருந்து வழிபட்டு வருவது வாழ்வில் வளத்தை அளிக்கிறது.