கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!

சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

உணவுகள் செரிப்பதற்கு நம் உண்ணக்கூடிய உணவில் அதிக நார்ச்சத்துகள் அவசியமாகும்.  கேழ்வரகு உணவுகளை அதிகமாக சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் வேகத்தை அதிகரிக்கும்.
 
கேழ்வரகில் புரதசத்து அதிகமாக காணப்படுகிறது. இந்த புரதச்சத்துகள் உடலின் சீரான இயக்கத்திற்கும், பிராணவாயுக்கும் இது முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. தினமும் கேழ்வரகால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பு தன்மையை பெறும்.
 
கேழ்வரகு மாவில் செய்யப்பட்ட கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது. எனவே உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்கிறது. விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு சிறந்த ஊட்ட உணவாக இருக்கிறது.
 
வாரம் ஒரு முறை அல்லது இருமுறை கேழ்வரகு உணவுகளை சாப்பிட்டு வந்தால் பற்கள், எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்கும். கேழ்வரகில் ட்ரிப்டோபான் எனப்படும் பொருள் பசி ஏற்படுவதை கட்டுப்படுத்துவதால் உடல் எடை சீக்கிரத்தில் குறைக்க முடிகிறது.
 
கேழ்வரகு கூழ், களி போன்றவற்றை சாப்பிடுவதால் உடல்உஷ்ணம் அதிகரிப்பதை தடுத்து உடலை குளிரச்செய்யும். கேழ்வரகில் நரம்புகளை வலுப்படுத்தும் சத்துகள் அதிகம் உள்ளன. கேழ்வரகு உணவுகளை அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் உடல் மற்றும் மன நலம் மேம்படும்.
 
பெண்கள் கேழ்வரகினால் செய்யப்பட்ட கஞ்சி மற்றும் இதர உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். தாய்மார்களுக்கும் உடல் சக்தி பெருகும்.
 
உடலில் மிதியோனின், லைசின் போன்ற வேதி பொருட்கள் அதிகம் உற்பத்தியாகி தோலில் சுருக்கங்கள் இல்லாமல், தோல் பளபளப்பு பெற்று இளமை தோற்றத்தை தருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்