முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து முகம் பிரகாசமாக...!!

பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகம் பிரகாசமாகும்.

தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும். ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.
 
துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும். நெல்லிக்காயை பாலில் அரைத்து பிழிந்து சாறு எடுத்து கொதிக்கவைத்து தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் முடி நன்றாக வளரும்.
 
ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.
 
எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும். இரவு உறங்குவதற்கு முன்பு சந்தன பவுடரை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்கள் மறையும்.
 
முகப்பரு இருக்கும் இடங்களில் புதினா இலைச் சாறைத் தடவினால் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
 
கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் சேர்த்துக் குழைத்து பருக்கள் இருக்கும் இடங்களில் தடவி வர பருக்கள் மறையும். உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக் கிழங்கை அரைத்து அந்தக் கூழை முகத்தில் தடவி காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் முகப்பரு மறைந்து விடும்.
 
வைட்டமின் ஈ எண்ணெய்யை முகத்தில் உள்ள கரும்புள்ளிகளில் தடவி வர கரும்புள்ளிகள் மறைந்து விடும். வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட்டாக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்கள் மறைந்து விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்