பப்பாளியில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. மேலும் இதில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும்.
பப்பாளியின் விழுது - கால் கப், தேன் - அரை தேக்கரண்டி, எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி. இவை மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும். 10 நிமிடங்களில் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்தில் நான்கு நாட்கள் செய்து வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி விழுது - தேவையான அளவு, ஆரஞ்சு சாறு - 3 தேக்கரண்டி. ஒரு பௌலில் பப்பாளி விழுது தேவையான அளவு எடுத்து கொண்டு, அதில் 3 தேக்கரண்டி ஆரஞ்சு சாறு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வரவும். இதனால் முகத்தில் எண்ணெய் வழியாமல் இருக்கும்.