வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி முகப்பருக்களை விரட்ட...!!

பருக்கள் உருவாக ஹார்மோன் பிரச்சினை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், அதிகமான எண்ணெய் சருமம் போன்றவற்றால் அடிக்கடி முகப் பருக்கள் தோன்றி நம் அழகையே கெடுத்து விடும். நிறைய பேர்களுக்கு இந்த முகப்பருக்கள் வலியையும் எரிச்சலையும் கூட கொடுக்கும். 

இந்த பருக்களை விரட்ட நிறைய அழகு சாதனப் பொருட்கள் கடைகளில் கிடைத்தாலும் நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது தான் சிறந்தது.
ஏனெனில் இது சருமத்தின் மீது எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் நல்ல பலனை அளிக்க கூடியது. பருக்களை விரட்டுவதற்கான இந்த எளிய முறையை வெறும் இரண்டு பொருட்களை கொண்டே செய்து விடலாம். 
 
சரும பராமரிப்பு 1:
 
பப்பாளி - லெமன் ஜூஸ்: பப்பாளி பழத்தில் உள்ள ஆன்டி ஹைட்ராக்ஸி அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. லெமன் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுத்து பருக்கள் போன்றவற்றை போக்குகிறது. பயன்படுத்தும் முறை அரை பப்பாளி பழத்தை எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இதை நன்றாக கெட்டியாக அரைக்கவும். இந்த பப்பாளி பேஸ்ட்டுடன் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இதை ஒரு வாரத்திற்கு ஒரு முறை என செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
 
சரும பராமரிப்பு 2:
 
பாதாம் – தேன்
பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் ஈ, கொழுப்பு அமிலங்கள் போன்றவை சரும ஜொலிப்பை தருகிறது. இந்த பேஸ் மாஸ்க் சருமத்தை சுத்தம் செய்து நல்ல பளபளப்பை கொடுக்கும். பயன்படுத்தும் முறை 10-15 பாதாம் பருப்பை எடுத்து சில மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். ஊற வைத்த பாதாம் பருப்பை மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்து 20 நிமிடங்கள் காய விடவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும். நல்ல முகம் பிரகாசமாக இருக்கும்.
 
சரும பராமரிப்பு 3:
 
கற்றாழை ஜெல் - க்ரீன் டீ: சரும ஜொலிப்பை தரக் கூடிய அனைத்து விட்டமின்களும் மினிரல்கள் கற்றாழையில் அமைந்துள்ளது. கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை போக்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்